×

தடை செய்த வலையில் மீன் பிடித்த மூன்று விசைப்படகுகள், 3.5 டன் மீன்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: மண்டபம் கடலில் தடை செய்த வலையில் மீன் பிடித்த, 3 விசைப்படகுகள், 3.5 டன் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடல் பகுதியில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றன. அதில் ஒரு சில படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மண்டபம் மீன்வளத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி தலைமையில் மீன்வளத்துறை ஊழியர்கள், மரைன் போலீசார் ரோந்து படகில் சென்று நேற்று கரை திரும்பிய படகுகளில் சோதனை செய்தனர்.

அப்போது இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அப்படகுகளில் இருந்த 3.5 டன் மீன்களை பறிமுதல் செய்து, ஏலமிட்டு அத்தொகையை அரசு கருவூல கணக்கில் செலுத்த உத்தரவிட்டனர். இந்த படகுகள் மீதான வழக்கு முடியம் வரை மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் வழங்கப்படாது என தெரிவித்தனர்.

Tags : Three fishing boats and 3.5 tonnes of fish were seized from the banned net
× RELATED மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில்...